About Us
The Sarah Tucker
Teacher Training
இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில் – மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்கள் கையில்…
சிறந்த முறையில் ஆசிரியர்களை உருவாக்கி வரும் தமிழகத்தின் நம்பர் 1 பயிற்சி நிறுவனம் சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பாளையங்கோட்டை.
சாதிக்கத் துடிக்கும் மாணவிகள் தெரிவு செய்வது சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.
சாராள் தக்கர் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தின் வரலாறு 19வது நூற்றாண்டில் இந்திய பெண்களின் கல்விக்காக, உருவாக்கப்பட்டதே சாராள் தக்கர் நிறுவனமாகும்.
அக்காலத்தில் அருள்திரு. ஜான்தக்கர் அவர்கள் சி.எம்.எஸ் மிஷனரியாக சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர் தனது ஊனமுற்ற சகோதரியான செல்வி சாராள் தக்கருக்கு இந்திய பெண் பிள்ளைகளை நிலைமையைப் பற்றி கடிதம் எழுதுவது வழக்கம்.இந்தியாவிற்கு வருகை தராத செல்வி சாராள் தக்கரின் உள்ளத்தைத் தொட்டது அன்னாரது கடிதங்கள் ! அவரும், அவரது சிநேகிதிகளும் இந்திய பெண் பிள்ளைகளின் கல்விக்காக நிதி திரட்டினர். இந்நிலையில் 1857ஆம் ஆண்டில் செல்வி சாராள் தக்கர் இவ்வுலக வாழ்வை விட்டு பரலோக வாழ்வை எய்தினார். இந்தியாவில் அவருக்கு நினைவகம் கட்டுவதற்காக அவரது சிநேகிதிகள் அருளட்திரு. ஜான் தக்கர் அவர்களுக்கு அனுப்பிய நிதியை கொண்டு அன்னாரது ஆலோசனையின்படி பாளையங்கோட்டையில் 1858ல் சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், அதனுடன் இணைந்த ஒரு சிறு மாதிரி பள்ளியும் உருவாக்கப்பட்டது. முதன் முதலாக டிப் தம்பதியினர் அதன் பொறுப்பை ஏற்றனர்.
1858 – 1959 வரை இடைநிலைப் பயிற்சிப் பள்ளியாகவும், 1959 – 1972 வரை ஆதாரப் பயிற்சிப் பள்ளியாகவும் செயல்பட்டது.செல்வி. மெரிடித், செல்வி. மேரி ரிச்சர்ட்ஸ், அருள்திரு. லாஸ், திருமதி. லாஸ், அருள்திரு. கேர்ட், செல்வி. லின்சி போன்ற மிஷனெரிகள் ஒவ்வொரு காலத்திலும் நன்முறையில் இங்கு பணியாற்றினர்.
1972 முதல் சாராள் தக்கர் ஆசிரியை பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 162 ஆண்டுகளாக சிறந்த ஆசிரியைகளை உருவாக்குகின்ற இந்நிறுவனம் NCTE – ஆல் அங்கீகரிக்கப்பட்டு மிகச் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து 80 மாணவிகளைக் கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம் 2003 முதல் மாணவிகளின் எண்ணிக்கை 160 ( 80 80 ) ஆக உயர்த்தப்பட்டு மீண்டும் 2005 – ல் 200 ( 100 100) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மாணவிகள் 50% நிர்வாக ஒதுக்கீடு அடிப்படையிலும் 50% தமிழக அரசால் ஒன்றைச் சாளரமுறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிறுவனத்திலிருந்து உருவாக்கப்படும் ஆசிரியைகள் சிறந்த இந்தியக் குடிமக்களை உருவாக்குவர் என்பது உறுதி. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எமது நிறுவனத்தில் பயின்ற ஏராளமான மாணவிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
Founder History
“Rome was not built in a day and so was
Sarah Tucker Teacher Training Institute”
During the early decades of the 19th Century when the benefits of schools were reaped only by boys, Girls were prohibited to learn from male teachers. So if the lamp of learning were to be carried into the dark recesses of the Indian Villages and towns some acceptable method was to be devised. The Missionary Societies met the problem by appealing for women missionaries to come out to India and take up the task of educating their Indian Sisters. Several women missionaries volunteered for service in India. The most important among them was ‘Sarah Tucker’, an invalid lady confined to her room, who was to become the far-off and almost fairy-like founder of the schools and college who so fittingly bear her name moved by reports about illiterate Women of India, she steeped in with a crusading spirit to provide schools for them. Seated at her desk, she wrote letters to her friends appealing for funds. Miss Sarah Tucker’s 24 Sovereigns came handy to open, Tinnevelly Female Normal School in 1843. Miss Sarah Tucker died in December, 1857. But her friends raised funds to open a ‘Training School for Women’ at Palayamcottah.
The Sarah Tucker Institutions are to be remembered as the nursery of some pioneer institutions for the education of the handicapped in the whole of India. After three decades of resolute spadework, the Upper Primary Boarding School attached to the Training Institution was upgraded as the ‘Sarah Tucker High School’ in 1890 with 5 Girl students. Miss Askwith had the Confidence and Courage to raise the Sarah Tucker High School to a Second Grade College and get it affiliated to the University of Madras in 1895 as the First College exclusively for women in the whole of India to the South of Lucknow.
Management Team
J.KALAICHELVI, M.A., B.Ed.,
Correspondent +91 9790105266
M.Santhi M.A.,M.Ed., M.Phil.,
Principal +91 9787670447
Sarah Tucker at a Glance
Mission Statement
Our mission at Sarah Tucker is to develop the unique abilities and potential of each child by offering an enriched educational program. We strive for excellence through a hands-on approach. Rich traditions rooted in our innovative curriculum grow productive, caring, and intellectually curious citizens.
Our Core Values
Our Philosophy
We, at Sarah Tucker, follow a child-centered educational approach. We make sure that it is based on scientific observations from birth to adulthood. We believe that a child is naturally curious and is capable of initiating learning in a supportive and thoughtfully prepared environment.